2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழில் கோழி இறைச்சி தட்டுப்பாடு

Gavitha   / 2015 ஏப்ரல் 08 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலுள்ள பண்ணைகள் மற்றும் கோழி இறைச்சி விற்பனை நிலையங்களில் கோழி இறைச்சிக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள கோழி இறைச்சிக் கடைகளில் ஒரு கிலோகிராம்  கோழி இறைச்சி 440 ரூபாய் தொடக்கம் 500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணத்திலுள்ள இறைச்சிக் கடைகளில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெப்பம் காரணமாக கோழி வளர்ப்பு குறைவடைந்துள்ளதாகவும் யாழ்ப்பாணத்திலுள்ள பண்ணைகளில் கோழிகள் இல்லையெனவும் கொழும்பிலிருந்து கோழிகள் கொண்டுவரப்பட்டாலே தட்;டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும் என்றும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X