2025 ஜூலை 16, புதன்கிழமை

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கு சேவை நயப்பு விழா

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்  

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி ரூபவதி கேதீஸ்வரனுக்கு சேவை நயப்பு விழா வெள்ளிக்கிழமை (10) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன் அங்கு உரையாற்றுகையில்,

மக்கள் இல்லாத மாவட்டத்தை பொறுப்பெடுத்த  இலங்கையின் முதலாவது அரசாங்க அதிபர் இவர் தான். போரினால் முற்றாக மக்கள் இடம் பெயர்ந்த மாவட்டத்தைப் பொறுப்பெடுத்து பூச்சியத்திலிருந்து இராச்சியமாக கட்டி எழுப்பிய மாபெரும் திறமைசாலி இவர். அரச உத்தியோகஸ்தர்களை தனது நேர்க்கணியச் செல்வாக்கின் மூலம் கவர்ந்து திறமையான குழுவாக செயற்பட வைத்த அற்புத ஆளுமை இவருடையது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X