2025 ஜூலை 16, புதன்கிழமை

கிளிநொச்சியில் விழிப்புணர்வு கருத்தரங்கு

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடன் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி ஊரியான் கிராமத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (10) நடைபெற்றது.        

கிளிநொச்சி மாவட்டத்தின் கிராம மட்டங்களில் இடம்பெறக்கூடிய பல்வேறுபட்ட பிரச்சனைகள் தொடர்பாகவும் மக்கள் மத்தியிலும் சேவையாற்றுகின்;ற அதிகாரிகள் மட்டத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தினூடாக பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஊரியான் கிராம அலுவலர் பிரிவில் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் மற்றும் சிறுவர்கள் பெண்களுக்கெதிரான வன்முறைகள் என்பவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் சட்ட ஆவணங்களைப் பெற்றுக்கொள்வது பற்றிய தெளிவூட்டும் கருந்தரங்கும் வெள்ளிக்கிழமை (10) ஊரியான் அன்சார் முன்பள்ளி மண்டபத்தில் ஊரியான் கிராம அலுவலர் யசோதா தலைமையில் நடைபெற்றது.

இதில் கருத்துரைகளை வழங்கிய இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தின் சட்டத்தரணி வீ.பிரசாந்தன் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகளின் அதிகரிப்பு தொடர்பாக ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

குறிப்பாக இக்கிராமத்தில் 12 வரையான குடும்பங்கள் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பாக இனங்காணப்பட்டுள்ளது. இவர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் எதிர்காலத்தில் சமூர்த்தி நிவாரண உதவிகள் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளை இடைநிறுத்தி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.

இதில் ஊரியான்  03 யுனிற் கிராமத்தை சேர்ந்த 45 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X