2025 ஜூலை 16, புதன்கிழமை

மனைவியை தாக்கிய கணவனுக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் உடுவில் பகுதியில் குடிபோதையில் மனைவியை தாக்கிய 35 வயதுடைய குடும்பஸ்தரை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட பதில் நீதவான் கே.அரியநாயகம் வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் மேற்படி இருவருக்கும் இடையிலான தாபரிப்பு வழக்கு நடைபெற்று வரும் நிலையில், வியாழக்கிழமை (09) குடிபோதையில் மனைவியின் வீட்டுக்கு சென்ற குடும்பஸ்தர் மனைவியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபரான கணவனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை பதில் நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X