2025 ஜூலை 16, புதன்கிழமை

கஞ்சாவுடன் கைதானவர்களை விசாரிக்க உத்தரவு

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நெடுந்தீவு கடற்பரப்பில் 87 கிலோ கிராம் கஞ்சாவுடன் கைதான சந்தேக நபர்கள் இருவரையும் 48 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம்,  வெள்ளிக்கிழமை (10) அனுமதி வழங்கியதாக நெடுந்தீவு பொலிஸார் சனிக்கிழமை (11) தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை (10) அதிகாலை கச்சதீவை அண்மித்த நெடுந்தீவு கடற்பரப்பில் இருந்து 6 மைல் கடல் தூரத்தில் வந்த படகை மறித்து சோதனையிட்ட கடற்படையினர், அப்படகில் இருந்து 87 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை மீட்டிருந்தனர்.
தொடர்ந்து சந்தேக நபர்களை நெடுந்தீவு பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைத்தனர்.

வெள்ளிக்கிழமை (10) சந்தேகநபர்களை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குரிய தடுப்புக்காவல் கட்டளைச் சட்ட அறிக்கையினை, ஊர்காவற்துறை நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர். வழக்கினை விசாரித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், 48 மணி நேரங்கள் விசாரணை செய்ய அனுமதியளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X