2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

திருட்டு துவிச்சக்கரவண்டிகளை விற்ற இருவர் கைது

George   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் துவிச்சக்கரவண்டிகளை திருடி விற்பனை செய்த சந்தேகநபர்கள்இருவரை வெள்ளிக்கிழமை(17) யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்னால் வைத்து கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான இருவரும் மானிப்பாய் சாவற்காடு பகுதியினை சேர்ந்த 21, 26 வயதுடையவர்கள் என பொலிஸார் கூறினர்.

மேலும், சந்தேக நபர்கள், திருடி விற்பனை செய்ததாக கூறப்படும்  துவிச்சக்கரவண்டிகள் 6ஐ விற்பனை செய்யப்பட்ட இடங்களில் இருந்து மீட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

யாழ். நகரப்பகுதின் வர்த்தக நிலையத்துக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட வேளை, சந்தேக நபர்களை மடக்கி பிடித்த பொது மக்கள், யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .