Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரை சனிக்கிழமை (18) கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
மேற்படி சந்தேக நபர் அதே பகுதியினை சேர்ந்தவர் எனவும் மணல் அகழ்வுக்காக பயன்படுத்தபட்ட சிறிய படி ரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் உழவு இயந்திரங்கள், டிப்பர் வாகனங்களை பயன்படுத்தி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மணல் கொள்ளையர்கள், தற்போது இலகுவான முறையில் அதிகளவு மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான முறையில் மணல் கொள்ளையில் ஈடுபடும் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்படி சந்தேக நபரை சனிக்கிழமை (18) சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
36 minute ago
40 minute ago