Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
மீள்குடியேறும் மக்களுக்கு அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்கவில்லை. இது தொடர்பில் அரச அதிபர், பிரதேச செயலாளர்கள் போன்ற அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 25 வருடகாலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலி.கிழக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வளலாய் ஜேஃ284 கிராம சேவையாளர் பிரிவில கடந்த மாதம் 13ஆம் திகதி ; 232 ஏக்கர் காணி மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டனர்.
அதனை அடுத்து அங்கு மீள் குடியேறி வரும் மக்களை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீள்குடியேறி வரும் மக்களுக்கு அரசாங்கத்தின் உதவிகள் கிட்டவில்லை. தற்காலிக வீடுகளோ மழைக்கு ஒதுங்க கூடியவாறான கொட்டில்கள் என்பன கூட அமைத்து கொடுக்கப்படவில்லை.
மீள் குடியேற்ற அமைச்சு வெறும் காணிகளை விடுவித்தால் மாத்திரம் போதாது. அவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
மீள் குடியேறியவர்கள் தங்குவதற்கு தற்காலிக தங்குமிடங்கள் தேவை. குறைந்த பட்சம் அங்கு வந்து குடியேறியவர்களுக்கு தற்காலிக கொட்டில்களையாவது அமைத்து கொடுக்க வேண்டும்.
அதேபோன்று வளலாய் கடற்கரையில் கற்கள் காணப்படுகின்றது. அந்த கற்கள் அகற்றப்பட்டால் தான் இங்கு வந்து குடியேறியவர்கள் இங்கிருந்து கடலுக்கு தமது வள்ளங்களை இறக்கி தொழிலுக்கு செல்ல முடியும்.
அதுமாத்திரமின்றி அங்கு கடலினுள் செல்கள் காணப்படுகின்றன. அவை தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவித்தும் இதுவரை அது அகற்றப்படவில்லை. இது ஒரு வருந்த கூடிய விடயம் என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
36 minute ago
40 minute ago