2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தற்காலிக கொட்டகைகள் அமைத்து தருமாறு மீள் குடியேறியுள்ள மக்கள் கோரிக்கை

George   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வளலாய் கிராம சேவையாளர் பிரிவில் மீள் குடியேறியுள்ள மக்கள் தமக்கு தற்காலிக கொட்டகைகள் அமைப்பதற்கு உதவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 25 வருடகாலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வலி. கிழக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வளலாய் ஜே 284 கிராம சேவையாளர் பிரிவில் 232 ஏக்கர் காணியில் மக்கள் மீள்குடியேற கடந்த மாதம் 13ஆம் திகதி அனுமதிக்கப்பட்டது.

அதனையடுத்து அப்பகுதியில் உள்ள தமது காணிகளை துப்பரவு செய்து மக்கள் மீள் குடியேறி வருகின்றனர். அவ்வாறாக இதுவரை 1௦ குடும்பங்கள் அப்பகுதியில் மீள் குடியேறியுள்ளன.

அப்பகுதியில் மீள் குடியேறிய மக்களை சனிக்கிழமை(18) தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் நேரில் சென்று சந்தித்தார்.

இதன் போதே மீள் குடியேறிய மக்கள், சுரேஷ் பிரேமசந்திரனிடம் இக் கோரிக்கையை முன் வைத்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்இ தாம் இப்பகுதியில் உள்ள காணிகளை துப்பரவு செய்து மீள் குடியேறி வருகின்றோம்.  எமக்கு இதுவரை எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவும் இல்லை. உதவிகளும் கிடைக்க பெறவில்லை.

எமக்கு தற்காலிக கொட்டகைகள் அமைக்க கூட உதவவில்லை. இதனால் தடிகளை நட்டு அதன் மேல் தகரங்களை போட்டு நாம் ஒரு குடிசையினை அமைத்துக்கொண்டு இங்கு வந்து குடியேறினோம்.

நேற்று திடீர் என பெய்த மழையினாலும் வீசிய காற்றினாலும் போடப்பட்டு இருந்த தகரங்கள் பறந்து விட்டன. இதனால் இரவு முழுவது மழையில் நனைத்ததுடன் பொருட்கள் அனைத்தும் மழையில் நனைந்து விட்டன.

தற்போது எமக்கு இருப்பதற்கு தற்காலிக கொட்டகைகளை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார்கள்.

அதற்கு பதில் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், தான் இது தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலாளருடன் கதைத்ததாகவும், அதற்கு பிரதேச செயலாளர் தான் நிறுவனங்களுடன் கதைத்து உள்ளதாகவும், இரு வாரங்களுக்குள் கொட்டகைகளை போடுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்ததாக சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .