Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
இணுவில் பரராஜ சேகரப்பிள்ளையார் ஆலய விக்கிரகத்தில் அணிவிக்கப்பட்டிருந்த வெள்ளியிலான கலசத்தை திருடிய சந்தேகநபரை சனிக்கிழமை (18) கைதுசெய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.வீ.எல்.துஸ்மந்த, தழிழ்மிரருக்கு தெரிவித்தார்.
கைதானவர் ஆணைக்கோட்டை பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நபர் என அவர் மேலும் தெரிவித்தார்.
இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் பரிசோதகர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் சந்தேகநபரை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைதான சந்தேகநபரிடம் இருந்து திருடப்பட்ட விக்கிரக கலசத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட கலசத்தின் பெறுமதி 35 ஆயிரம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி ஆலயத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கலசம் திருடப்பட்டமை தொடர்பில், ஆலய நிர்வாகத்தினர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
41 minute ago
43 minute ago
2 hours ago