Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் 24 கிராம சேவையாளர் பிரிவுகளில், எந்த கிராம சேவையாளர் பிரிவும் முழுவதுமாக விடுவிக்கப்படவில்லை என மீள்குடியேற்ற குழு தலைவரும் வலி. வடக்கு பிரதேச சபை உப தவிசாளருமான எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார்.
கடந்த 25 வருடகாலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த பகுதிகளில் 1,000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் 5 ஏக்கர் 10 ஏக்கர் என சிறு பகுதிகளை விடுவித்து விட்டு அக்கிராம சேவையாளர் பிரிவு விடுவிக்கப்பட்டு விட்டது என கூறுவது ஓர் ஏமாற்று வேலையாகும்.
அனைத்து கிராம சேவையாளர் பிரிவிலும் சிறு பகுதியே விடுவிக்கபட்டுள்ளது.
எனவே இது எங்களை பொறுத்த வரை அரசாங்கத்தின் ஏமாற்று வேலையாக தான் பார்க்கின்றோம். விடுவிக்கப்பட்ட பகுதிகளிலும் சில காணிகளை இராணுவத்தினர் வைத்துள்ளனர். வீடுகள் உயர் பாதுகாப்பு வலயத்தினுள்ளும் மலசல கூடம் கிணறுகள் என்பன விடுவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் தமது காணிகளில் அவர்கள் மீள் குடியேற முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. காணிகள் விடுவிக்கும் போது அவை ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளும் முற்றாக விடுவிக்கப்பட வேண்டும்.
அதேபோன்று விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள சில வீடுகளிலும் சில விவசாய காணிகளிலும் இராணுவத்தினர் முகாம் அமைத்து தொடர்ந்து நிலை கொண்டுள்ளனர்.
இதானல் மக்கள் மீள் குடியேறவோ விவசாயம் செய்யவோ அச்சம் கொள்கின்றனர். அவர்கள் அச்சமின்றி குடியேற விவசாயம் செய்ய இராணுவத்தினர் இப்பகுதியில் இருந்து முற்றாக வெளியேற வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
41 minute ago
46 minute ago
48 minute ago