2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

'முதலமைச்சருடனான கலந்துரையாடலுக்கு நேரம் ஒதுக்கி தரவில்லை'

George   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வட மாகாண முதலமைச்சரிடம்  சுன்னாகம்  பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை சம்பந்தமான கலந்துரையாடலுக்கு நேரம் கேட்டு கடிதம் எழுதி பல மாதங்கள் கடந்த நிலையிலும் கூட இது சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கு உரிய நேரம் ஒதுக்கீடு செய்து தரப்படவில்லை என யாழ். மாவட்ட மருத்துவர் சங்கத்தின் தலைவர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்தார்.

சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை சம்பந்தமான ஆவணப்பட இறுவட்டு வெளியீட்டு விழா, சுன்னாகம் சிவன் கோவில் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.

இதில் சிறப்புரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த பெப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் வேளையில் 13, 14ஆம் திகதிகளில் நேரம் ஒதுக்குவதாக முதலமைச்சரின் செயலாளர் எமக்கு அறிவித்தார். 

ஆனால், நாம் இந்திய பிரதமர் வரும் நிலையில் இது சாத்தியப்படுமா என்ற கேள்வி எழுப்பிய போது அது சாத்தியப்படும் எனத் தெரிவித்து விட்டு இறுதி நிமிடத்தில் அதனை இரத்து செய்தனர்.

நாம் இன்று வரை இந்தக் கலந்துரையாடலுக்கான நேரம் ஒதுக்கி தரப்படும் என எதிர்பார்த்து இருக்கின்றோம். ஆனால் இது வரையில் எமக்கு நேரம் வழங்கப்படவில்லையென அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .