Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
George / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
வலிகாமம் பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளும் வட மாகாண நிபுணர் குழுவில் இடம் பெற்றுள்ள ஒன்பது பேரும் இந்த விடயத்தில் முன் அனுபவம் அற்றவர்கள் என களனி பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி கே.குமரேசன் தெரிவித்துள்ளார்.
சுன்னாகம் சிவன் கோவில் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(17) சுன்னாகத்தில் தகிர்க்கும் தண்ணீர் என்னும் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்த கருத்துக் கூறுகையில்,
இந்;த நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை சம்பந்தமான ஆய்வினை வெளிநாட்டில் உள்ள முன் அனுபவம் வாய்ந்தவர்களை கொண்டு மேற்கொள்வதன் மூலமே இதனை முழுமைப்படுத்த முடியும்.
இதனைவிடுத்து தற்போது வட மாகாண சபையால் நியமனம் செய்யப்பட்டுள்ள நிபுணர் குழவில் இடம் பெற்றுள்ளவர்கள் ஒன்பது பேரின் தகமைகளை பார்க்கும் போது இவர்களில் யாரும் இத்தகைய அனுபவத்தைக் கொண்டவர்களாக இல்லை.
ஆகையினால் இதனை மறு பரிசீலனை செய்வதுடன் இவர்களுடன் முன் அனுபவம் கொண்ட வெளிநாட்டு நிபுணர்களையும் இணைப்பதன் மூலம் இங்குள்ளவர்களும் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என இவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
39 minute ago
44 minute ago
46 minute ago