Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 19 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்
பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபட்ட கடற்றொழில் நடவடிக்கைகளை கடற்றொழிலாளர்கள் மேற்கொள்வதாலேயே கடற்றொழிலாளர்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
பச்சிலைப்பள்ளி பிரதேச கடற்றொழிலாளர் சங்கங்கங்களின் பிரதிநிதிகளை சனிக்கிழமை (18) மீனவர் சங்க மண்டபத்தில் சந்தித்துக் கலந்துரையாடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடற்றொழில் நடவடிக்கைகளின் போது நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் ஒரேவிதமான கடற்றொழில் சட்டத்திட்டங்களும் விதிமுறைகளுமே நடைமுறையில் இருக்க வேண்டும். பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபட்ட நடைமுறைகள் இருக்க முடியாது. அவ்வாறு இருப்பின் அது சில பகுதி கடற்றொழிலாளர்களுக்கு நன்மையாகவும் சிலருக்கு பாதகமாகவும் அமையும்.
ஒவ்வொரு மாவட்;டங்களிலும் வேறுபட்ட கடற்றொழில் நடவடிக்கைகளால் கடற்றொழிலாளர்கள் மத்தியில் பாதிப்புக்களும் பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால், உள்ளூர் மீனவர்களிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால், மாவட்டத்துக்கு மாவட்டம் பாகுபாடு காட்டாமல் எல்லோரையும் ஒரே நிலையில் பார்க்க வேண்டும்.
இந்திய மற்றும் தென்னிலங்கை கடற்றொழிலாளர்கள் எமது கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர் இதனால், எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், கடல் வளமும் அழிந்து செல்கிறது.
எதுவித அச்சமும் இன்றி தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கிறார்கள்;;. இதனால் அனைத்து கடற்றொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் சந்தித்துப் பேசி இதற்கு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
6 minute ago
42 minute ago
47 minute ago