2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

விடுவிக்கப்பட்ட இடங்களில் இருந்து மரக்கடத்தல்கள் தொடர்கின்றன

Gavitha   / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்குப் பகுதியிலுள்ள காணிகளிலுள்ள பயன்தரு மரங்கள், இரவு வேளைகளில் சூறையாடப்பட்டு வருவதாக  மீளக்குடியேறத் தயாராகும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர்களிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் கூறினர்.

பகல் நேரத்தில் காணிகளுக்குள் விறகு பொறுக்கச் செல்வதாகக் கூறிச் செல்லும் நபர்கள், மரங்களை அடையாளப்படுத்தி இரவு வேளையில் வந்து தறித்துச் செல்கின்றனர். வேம்பு, புளி, பலா மரம், மா மரம் ஆகிய மரங்களே இவ்வாறு தறித்துச் செல்லப்படுகின்றன.

விடுவிக்கப்பட்ட இடங்களில் இருந்த வீடுகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், மரங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளது. அதனையும் இவர்கள் தறிந்து செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என மக்கள் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .