2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அரசியல் பதவிகள் நிரந்தரமில்லை: கே.வி.குகேந்திரன்

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் பதவிகள் வாழ்வியல் காலச்சுற்றோட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. அதனூடான சேவைகளே மக்களுக்கான உயிரோட்டம். அரசியல் பதவிகள் நிரந்தரமானவை அல்ல என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார்.

அரியாலை மேற்கு காந்தி சனசமூக நிலையத்தின் 66ஆவது அகவையை முன்னிட்டு கலைவிழாவும் விளையாட்டு நிகழ்வுகளும் கடந்த 16ஆம் திகதி முதல் 4 நாட்களாக நடைபெற்றது. நிகழ்வின் இறுதி நாளில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது,

சமூகத்தில் கலை நிகழ்வுகளை நடத்துவதானது  இளம் சமூகத்தினரிடையே ஓர் ஐக்கியத்தை உருவாக்கி அதனூடாக சமூகத்தினது விழுமியங்களையும் கலாசாரங்களையும் தீர்க்க சிந்தனையான பதிவுக்களுடன் எமது இளம் சமூகத்தினரை உருவாக்கிக் கொள்ள முடியும்.

அத்தகைய ஒரு வளமான சமூகத்தை உருவாக்குவதனூடாக எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு தமது வாழ்வியலை வெற்றிகரமானதாக நகர்த்திச்செல்லும் மனோதிடத்தை  எமது இளம் சமூகத்துக்கு வித்திட காரணமாகவும் பாரம்பரிய கலை நிகழ்வுகள் அமைகின்றன.

அரசியல் பதவிகளை நிரந்தரமான ஒரு சொத்தாக பலர் நினைக்கின்றனர். அது மனிதனின் வாழ்வியல் காலச்சுற்றோட்டத்தின் ஒரு பகுதி மட்டுமாகவே இருக்கின்றது என்பதை பதவிகளை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் சிந்திப்பார்களானால் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதிகளின் அனைத்துத் தேவைகளும் இலகுவாக பூரணப்படுத்தப்படும்.

தேர்தலுக்காக கூட்டுச்சேர்ந்து கொள்வதும், தேர்தலையொட்டி தெருவுக்குவந்து நாடகம் நடத்தும் நடிகர்களும் நாங்கள் இல்லை. மக்களுக்கான சேவைகளை நாளாந்தம் செய்துவரும் ஒரு மக்கள் பலங்கொண்ட அரசியல் போராட்ட அமைப்பாகவே ஈ.பி.டி.பி இருக்கின்றது.

மாற்றங்களானது நிரந்தரமான ஒன்றல்ல. அது நாளாந்தம் மாறிக் கொண்டிருக்கின்றது. தற்போதைய எமது அரசியல் நகர்வுகளும் அப்படியானதாகவே உள்ளது. மிகவிரைவில் இலங்கை அரசியலிலும் சிறப்பானதொரு மாற்றம் வரவுள்ளது. அந்த மாற்றமானது மீண்டும் தமிழ் மக்களுக்கானதாக அமையும் என்பது தான் உண்மை. அதுவரை பொறுமை காப்பது  காலத்தினது தேவையாகும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .