2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மாகாண சபையை அன்று ஏற்காதவர்கள் இன்று ஏற்கின்றனர்: பெருமாள்

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

இந்திய மத்திய அரசாங்கம், தமிழ்நாட்டு அரசாங்கம் (கருணாநிதி ஆட்சி), இலங்கை அரசாங்கம், புலிகள் இயக்கம், தமிழ்ச் சமூகம் என அனைத்துத் தரப்பும் மாகாண சபையை இயக்க முடியாத நிலைக்கு முன்னர் கொண்டுசென்றன. ஆனால், புலிகள் தவிர்ந்த மிகுதி அனைத்துத் தரப்புபினரும் தற்போது மாகாண சபையை ஏற்றுப் பங்கெடுக்கின்றன என்று வடக்கு - கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஆறுதல் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மாகாணசபையை ஒரு திருப்தியற்ற நிலையில் தான் இன்னமும் தமிழ்த்தரப்பு பார்க்கின்றது. சிங்கள தரப்பிலும் அப்படியான எண்ணம் உண்டு. குறிப்பாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை வேண்டாம் என்று சொல்பவர்கள் இரண்டு தரப்பிலும் உள்ளனர்' என்றார்.

'பொதுவாழ்வில் ஈடுபடும் போதும் நெருக்கடியான களத்தில் அரசியல் பணியாற்றும் போதும் புகழும் பாராட்டும் பட்டுக் கம்பளங்களும் சிம்மாசனங்களும் மட்டும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது. சவால்களும் நெருக்கடிகளும் வசையும் அவமானங்களும் எதிர்ப்புகளும் கூட இதன்போது ஏற்படும். அவற்றை எதிர்கொள்ள வேண்டும். அப்படியான ஒரு காலத்தில் தான் வடக்கு - கிழக்கு மாகாண சபையை ஆரம்பித்து நடத்தினோம்.

மாகாண சபையை சிறப்பாக இயக்குவதற்கு முடியும். அதற்கான பொறிமுறைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். உரையாடல்களை நடத்த வேண்டும். தொடர்பாடல்களை மேற்கொள்ள வேண்டும். சட்ட ரீதியாக அணுக வேண்டிய விடயங்களுக்கு அதற்கான வழிமுறைகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலமே மாகாண சபையை வலுவுள்ளதாக்க முடியும். தமிழ்ச் சமூகத்தில் மாற்றுக்கருத்து, பன்முகச் சிந்தனைகளுக்கான இடம் இன்னும் இல்லாதிருப்பது கவலைக்குரியது' என்று வரதராஜப்பெருமாள் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .