Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Sudharshini / 2015 மே 03 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன்
எமது பூர்வீக இடமான இரணைதீவில் சென்று வாழ்வதற்கும் அங்கு தொழில் செய்வதற்குமான உரிமையினை பெற்றுத்தருவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என புநகரி கடற்தொழிலாளர்; கூட்டுறவுச் சங்;கங்களின் சமாசத்தலைவர் யோசப் பிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை (03) தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
எங்களது பூர்வீக இடமான இரணைதீவில் பிறந்து வளர்ந்து, அங்கே தொழில் செய்து வந்தோம்.; யுத்தத்தால்; இடம்பெயர்ந்து இன்று அங்கு சென்று வாழ்வதற்கோ அல்லது தொழில் செய்வதற்கோ முடியாது எங்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒரு பெரிய கிராமம் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு விடுதலை கிடைக்க வேண்டும். தொழிலாளர்கள் பிரச்சினைகளை தெளிவுபடுத்திருக்கின்றோம். ஆனால்;, அதற்கான விடிவு இல்லை.
கிளிநொச்சி மாவட்ட கடற்பகுதிகளில் 18 வகையான தொழில் வகைகள் தடை செய்யப்பட்;டிருக்கின்றன. பல தடவைகள் எமது கடற்தொழிலாளர்கள் தொழில் ஈடுபட முற்பட்ட போது கைது செய்யப்;பட்டு, நீதிமன்ற தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்;பட்டிருக்கின்றனர்.
யாழ். மாவட்டத்தில் அந்த நிலை மாறியிருக்கின்றது. அதற்கான சில அனுமதிகள் கிடைத்திருப்பதாக அறிகின்றோம். எங்களுடைய கடல் எல்லையிலிருந்து நாங்கள் பார்க்கும் போது எங்களின் தொழில்களைப் பாதிக்கும் தொழில் முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வாழ்கின்ற எங்களது தொழிலாளர்களை சில சந்தர்ப்பங்;கள் தடுமாறவைக்கின்றன. அண்மையில் 2 கிலோ மீற்றர் தொலைவில் தொழில் செய்து கொண்டிருந்த எமது தொழிலாளர்;களின் தொழில் உபகரணங்கள் அழிக்கப்பட்டன.
எமது கடற்தொழிலாளர்கள் 10 இலட்சம், 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான தொழில் உபகரணங்;களை கரையிலே குவித்து வைத்துவிட்டு தொழில் இன்றி கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றனர்
தூரம் போனால் இந்திய இழுவைப் படகுகளில் அத்துமீறல், கரையோரத்தில் செய்தால் வெளி மாவட்ட மீனவர்களின் தொல்லை என பிரச்சனைகளுக்கு எமது மீனவர்கள் முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்றார்.
இரணைதீவைச் சேர்ந்த மக்கள் தற்போது இரணைமாதா நகர் எனும் இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சொந்தவூரில் கடற்றொழில் செய்வதற்கான அனுமதியை கேட்டு மாவட்டச் செலயாளர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என பலரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 minute ago
56 minute ago