2025 ஜூலை 09, புதன்கிழமை

கசிப்பு காய்ச்சிய பெண் கைது

Princiya Dixci   / 2015 மே 04 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

துன்னாலை மேற்கு தக்குச்சம்பாட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் கசிப்பு காய்ச்சிய 33 வயதுடைய பெண்ணொருவரை ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்ததாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணிடமிருந்து 11 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டது.

காங்கேசன்துறை விசேட பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், கசிப்பு காய்ச்சும் இடம் கண்டுபிடிக்கப்பட்டு சுற்றிவளைக்கப்பட்ட போது காங்கேசன்துறை பொலிஸாரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .