2025 ஜூலை 09, புதன்கிழமை

பரந்தனில் புதிய பாலம்

Gavitha   / 2015 மே 04 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் 3 மில்லியன் ரூபாய் செலவில் பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் திங்கட்கிழமை (04) தெரிவித்தார்.

பரந்தன் முதலாம் ஒழுங்கைக் கிராமமக்கள் பயன்படுத்தும் இந்தப் பாலம் கடந்த முறை இரணைமடு வான் கதவுகள் திறக்கும் போது நீர்பாய்ந்த சேதமடைந்தது. இதனால் இந்த வீதியூடாக மக்கள் பயணிக்க முடியாத நிலையேற்பட்டது.

இதனை கருத்திற்கொண்டு நீர்ப்பாசனத் திணைக்களத்தால் விரைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்தப் பாலம் மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் கூறினார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .