2025 ஜூலை 09, புதன்கிழமை

மனைவி, பிள்ளைகளை துன்புறுத்தியவர் விளக்கமறியலில்

George   / 2015 மே 04 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மனைவி மற்றும் பிள்ளைகளை துன்புறுத்திய துன்னாலை வேம்படி பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் உருத்திராபதி விஜயராணி திங்கட்கிழமை (04) உத்தரவிட்டார்.

சந்தேகநபரை சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையில் தெல்லிப்பளை மனநல வைத்தியசாலையில் அனுமதித்து, அதன் வைத்திய அறிக்கையை எதிர்வரும் வழக்கு தவணையின் போது,  சமர்பிக்குமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சந்தேகநபரான குடும்பஸ்தர் தினந்தோறும் மதுபோதையில் வீட்டுக்குச் சென்று மனைவியை தாக்குவதுடன், பிள்ளைகளையும் துன்புறுத்தி வந்துள்ளார். பிள்ளைகளை பாடசாலை செல்ல விடாது தடுத்தும் வந்துள்ளார்.

மனைவி நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரான குடும்பஸ்தரை திங்கட்கிழமை (04) கைது செய்து நீதவானின் வாசஸ்தலத்தில் சந்தேகநபர் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .