Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Thipaan / 2015 மே 05 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நா.நவரத்தினராசா
புன்னாலைக்கட்டுவன் தெற்கு ஈவினை சந்தியால் திங்கட்கிழமை (04) சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதா சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுனர், மோட்டார் சைக்கிளை விட்டுக் குதித்தமையால் தீக்காயங்கள் இன்றித் தப்பியுள்ளார்.
நிகழ்வு ஒன்றுக்குச் சென்றுவிட்டு வந்தவரின் மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தாங்கியில் தீப்பிடிக்கவே, அவர் மோட்டார் சைக்கிளை தள்ளிவிட்டுத் பாய்ந்துள்ளார்.
இதில் சுமார் 2 ½ இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago