Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 15 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், எம்.றொசாந்த்
யாழ். புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதனின் படுகொலையை கண்டித்து யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் ஆர்ப்பாட்டங்கள் இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
இந்த மாணவி நேற்றுமுன்தினம் புதன்கிழமை (13) பாடசாலைக்கு செல்லும் வழியில் கடத்தப்பட்டு, பற்றைக்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை ஊர்காவற்றுறை பொலிஸார்; கைதுசெய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை கண்டித்து யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கிளிநொச்சி புனித சென் திரேசா மகளிர் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;.
இதன்போது, 'சிதைக்கப்பட்ட வித்தியாவின் விடை எங்கே', 'சட்டமே, வீணாக்கப்படப்போகும் வித்தியாக்களை காப்பாற்று', 'புங்குடுதீவு புதல்விக்கு புது நீதி சொல்லு', 'பதுங்கியிருக்கும் நரிகளை பொசுக்கிவிடு' உள்ளிட்ட சுலோகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை தாங்கியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, இந்த மாணவி கொலை செய்யப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர் சங்கம், கல்விசார ஊழியர்கள் ஆகியோர் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த மாணவியின் கொலையை அடுத்து, பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகையில் பல்கலைக்கழக சமூகம் ஆர்ப்பாட்டம் செய்துள்ளது.
ugauganth Friday, 15 May 2015 01:58 PM
good .
Reply : 0 0
ugauganth Friday, 15 May 2015 01:59 PM
good ..i am feeling sad sisther
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago