2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு

Sudharshini   / 2015 மே 16 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வந்த பணியாளர்களின் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாகவும் பணியின்றி இரண்டு மாதம் கொடுப்பனவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நிறுவனம் 2 கோடியே 86 இலட்சம் ரூபாய் நிதியை ஒதிக்கீடு செய்துள்ளதென பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்ட பணியாளர்கள் சனிக்கிழமை (16) தெரிவித்தனர்.
 
இது தொடர்பாக பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்ட பணியாளர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இதன்போதே இவ்வாறு தெரிவித்தனர்.
 
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
 
நிறுவனம் கடந்த வாரம் பணியிலிருந்து ஓப்பந்த விதிமுறைகளுக்கு மாறாக எவ்வித கொடுப்பனவும் இன்றி திடீரென 450 வரையான பணியாளர்களை பணியிலிருந்து நிறுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
 
இந்த பிரச்சினை நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஊடாக,  மீள்குடியேற்ற அமைச்சர் சுவாதிநாதனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு  மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைவாக விரைவாக எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பணியாளர்களுக்கு  பணியில்லாது அவர்களது இரண்டு மாதம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஐந்து வருடத்தை பூர்த்தி செய்த அல்லது நெருங்கியுள்ள பணியாளர்களுக்கு போனஸ் கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது. இதற்காக 2 கோடியே 86 இலட்சம் ரூபாய் நிதி நிறுவனத்தினால் செலவு செய்யப்படுகிறது.
 
எனவேதான், இந்த தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக அதிக அக்கறையோடு செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிளிநொச்சி அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், தொழில் திணைக்கள அதிகாரிகள், முக்கியமாக ஊடகங்கள் ஆகியோருக்கு மகிழ்ச்சியுடன் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் என கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .