Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Sudharshini / 2015 மே 17 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
தற்போது இருக்கும் தமிழ்க் கட்சிகளில் எங்கள் கட்சியே எதிர்கட்சியாகவுள்ளது. மற்றையவர்கள் எல்லாம் அரசாங்கத்துக்கு பங்காளி கட்சிகளாக இருக்கின்றனர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழத்; தேசிய மக்கள் முன்னணியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியமை தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில் சனிக்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
ஜனவரி 8ஆம் திகதிக்கு பிறகு தமிழர்களுக்கு ஜன்னல் திறக்கப்பட்டு மூச்சு எடுக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் வீதிகளில் ஜனநாயகம் ஓடுவதாகவும் கூறுகின்றனர். ஆனால், இறந்த எங்கள் உறவுகளுக்கு மிகவும் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது.
தமிழ் கட்சிகளில் எதிர்கட்சி நாங்கள் மட்டுமே. மற்றையவர்கள் எல்லாம் அரசின் பங்காளி கட்சிகள். அமைச்சு பதவிகளை எடுக்காமல் சிலர் இருக்கின்றார்கள். அமைச்சு பதவிக்கு மேலான தேசிய நிர்ணய சபையில் இருக்கின்றார்கள். முழு பெரும் பங்காளிகள் நாங்கள் மட்டும் தான்.
அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து சுதந்திரமாக செயற்படும் ஒரு அமைப்பு அதுவும் தமிழ்த்; தேசியவாதத்தை மையப்படுத்தி செயற்படும் அமைப்பு எங்கள் கட்சி தான். அப்படியான அமைப்பு ஏற்பாடு செய்த அமைதியான நிகழ்வுக்கு தடையை கோரிய பொலிஸ், புதிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. ஜனவரி 8 ஆம் திகதிக்கு பிறகு நல்லாட்சி நிலவுவதாகவும் ஜனநாயகம் மலர்ந்துள்ளதாகவும் சட்டத்தின் ஆட்சி நிலவுவதாகவும் இங்கே ஒரு மாயைக் கதை கூறப்படுகின்றது.
தமிழ் மக்களின் விவகாரத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் இந்த அரசாங்கத்துக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை. நினைவேந்தல் நிகழ்வு நிச்சயமாக வேறு ஒரு இடத்தில் நடைபெறும் என்பதனை இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்கின்றோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago