2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கிடங்கினுள் இருந்து ஆயுதங்கள் மீட்பு

George   / 2015 மே 17 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் உரும்பிராய் கணேச வித்தியாலயத்துக்கு அருகில் வீடொன்று அமைப்பதற்கான அத்திபாரம் வெட்டிய போது அதற்குள் இருந்து ஆயுதங்கள் அடங்கிய 4 சிறிய கொள்கலன்கள் சனிக்கிழமை(16) கண்டுபிடிக்கப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் கூறினர்.

பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டு கிறிஸ் பூசப்பட்டு இந்த ஆயுதங்கள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளன.

1986ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 9ஆம் திகதி இந்த ஆயுதங்கள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான அறிவித்தல் அட்டையொன்றும் ஆயுதங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் நான்கு டசின் முட்டை, நான்கு டசின் பியூஸ், இரண்டு சாவி எனக்குறிப்பிட்டிருந்தது. இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவின் உதவியுடன் ஆயுதங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .