Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Sudharshini / 2015 மே 17 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்
பயங்கரவாதிகளிடமிருந்து உங்களை காப்பாற்றுவதற்கு தான் பாடுபட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறி வந்த கூற்றை, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட கட்சிப் பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் சனிக்கிழமை (16) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
போர் முடிவடைந்த பின்னர், கடந்த 6 ஆண்டுகளாக இந்த நாட்டில் எவ்விதமான ஆட்சி நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். உங்களை பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றினோம் என சொன்ன கடந்த அரசாங்கத்தின் கருத்தை எமது மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. எப்பொழுதோ அக்கருத்து தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்றார்.
நிகழ்வில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உரையாற்றுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருக்கு கையளிக்கும் நோக்கில், இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுக்காணிகள், தனியார் காணிகள், காட்டுப்பகுதிகள் தொடர்பான விவரங்களை திரட்டவேண்டியிருக்கின்றது.
இதை திரட்டி கொடுப்பதன் மூலம் அரசாங்கத்திடம் அது தொடர்பில் புள்ளி விபரங்களோடு பேச முடியும். அதற்கு கட்சி உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என அனைவரும் பாடுபடவேண்டும்.
இப்பொழுது வடபகுதியில் காணப்படுகின்ற சமுக சீரழிவுகள், பாலியல் வன்புணர்வுகள், கொலைகள், கொள்ளைகள், போதைவஸ்து பாவனை தொடர்பில் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிவர்களாக இருக்கின்றோம்.
சட்டவிரோத சமூக செயற்பாடுகளுக்கு காரணமானவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு மட்டுமல்ல, சமூக அக்கறையுள்ள அனைவருக்கும் உண்டு என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago