2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கோப்பாய் விபத்தில் ஒருவர் பலி

George   / 2015 மே 17 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் கோப்பாய் சந்திக்கருகில் ஞாயிற்றுக்கிழமை (17) காலையில் முச்சக்கரவண்டியும் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸூம் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் கூறினர்.

மேலும், முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

திருகோணமலையைச் சேர்ந்த அன்டன் ஜூட் பிரான்சிஸ் (வயது 45) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கைதடியிலிருந்து கோப்பாய் நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி, பருத்தித்துறை வீதிக்கு செல்ல முற்பட்ட போது, யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ் மோதியுள்ளது.

இதில் முச்சக்கரவண்டி தூக்கி வீசப்பட்டதுடன் அதில்பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததுள்ளார். பஸ் சாரதியை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .