Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 மே 17 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக மக்கள் பிரதிநிதிகள் மிகக்கடுமையாக உழைக்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக நாம் அந்த உழைப்பை செலுத்தியதனூடாக மக்களின் வாழ்நிலைகள் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால் மக்களின் உரிமைக்காக மட்டும் செயற்படுவதாகக் கூறிக்கொண்டிருப்பவர்கள் இதுவரை ஒருபடியேனும் முன்னேறவில்லை. அதற்காக அவர்கள் உழைக்கவும் இல்லை. மாறாக வெளிநாட்டவரிடம் மகஜர் கையளிப்பதிலேயே காலங்களை கழித்துள்ளனர் என ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை (16) இடம்பெற்ற கல்மடுநகர் மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,
'மக்கள் இன்று தமது தேவைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக சிந்திக்க வேண்டிய கட்டத்துக்கு வந்துவிட்டனர். கடந்த காலங்களில் யுத்தத்தால் மக்கள் எதிர்கொண்ட வலிகளிலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே நாம் கடந்த ஐந்து வருடங்களாக மிகக்கடினமாக உழைத்தோம் அதற்கூடாக பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் மக்களின் பல தேவைகளுக்கு தீர்வுகாணப்படவில்லை.
இந்நிலையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்கின்றனர். அதற்காக மக்களின் கைகளிலிருக்கும் மிகப் பெரிய பலமான வாக்குப்பலத்தை மக்கள் பிரயோகிக்கின்றனர். ஆனால் மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் மக்களைப்பற்றி சிந்திக்காத நிலை காணப்படுமாயின் மக்களின் கைகளிலிருந்த மிகப் பெறுமதியான வாக்குகள் வீண் விரயமாக்கப்பட்டு விட்டதாகவே அர்த்தப்படுகின்றது. அதனால் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் தேவைகளுக்கும் சாவு மணி அடிக்கப்படுகின்றது.
ஆகவே மக்களின் வாக்குப்பலம் சரியாக பயன்படுத்தப்பட வேண்டுமாயின் மக்களை உண்மையாக நேசிப்பவர்கள் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதில் ஆர்வம்கொண்டவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படும் போதுதான் மக்களின் வாழ்வில் உயர்வு ஏற்படும் ஆனால் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக மக்களால் அளிக்கப்பட்டுவரும் வாக்குகளால் மக்களுக்கு எந்தவிதமான விடிவும் ஏற்படவில்லை.
மக்களை தந்திரோபாயமாக ஏமாற்றுபவர்களுக்கு தொடர்ந்தும் வாக்களிக்கப்பட்டு வருவதனால் ஏமாற்றங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன உலகத்தின் பெயராலும் அமெரிக்கா ஐ.நா, ஜெனீவா போன்றவற்றின் பெயராலும் தமிழர்களின் ஒற்றுமைப்பலத்தை வெளிப்படுத்துவதென்றும் தமிழ் உணர்வுகள் பற்றி பேசியும் மக்களிடமிருந்து வாக்குகள் அபகரிக்கப்படுகின்றன. உலகில் தமிழர்களின் வரலாற்றிலேயே இவ்வாறு தொடர்ந்தும் ஏமாற்றங்களை எதிர்கொள்ளும் வரலாறு தொடர்கின்றது. ஆனால் நாட்டின் தென்பகுதியிலோ அல்லது உலகத்தின் வேறு நாடுகளிலோ இவ்வாறு தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் வரலாறு இல்லை.
ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் குறிப்பிடப்படுவது போன்று உலகம் தமிழ் மக்களின் ஒற்றுமையை உண்ணிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது என்ற கோசம் இப்போது எழத் தொடங்கிவிட்டது ஆனால் உலகம் தமிழர்களை ஏமாற்றிக்கொண்டிருப்பது பற்றி எவரும் பேசுவதில்லை. அதாவது சர்வதேசம் மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சியலிருந்து அப்புறப்படுத்துவதற்காக தமிழர்களை ஆயுதமாக பயன்படுத்தியது யுத்தக்குற்ற விசாரணை மனித உரிமை மீறல் என்றெல்லாம் குறிப்பிட்டது.
பின் மஹிந்த அரசாங்கம் வீழ்த்தப்பட்டவுடன் உலகம் தமிழர்களின் பிரச்சினையை கைவிட்டு விட்டது. இவ்வாறு தமது தேவைக்காக எம்மை பயன்படுத்தும் சர்வதேசத்திற்கா தமிழர்கள் ஒற்றுமையைக்காட்ட வேண்டும். ஆகவே எமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காக வெளிநாடுகளிடம் மகஜர்களை கையளிப்பதனூடாக தீர்வு எதுவும் கிடைக்கப் போவதில்லை.
எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நாங்களே உழைக்க வேண்டும் அது தமிழர்களின் உரிமைப்பிரச்சினையாக இருந்தாலும் சரி மக்களின் வாழ்வியல் மேம்பாடாக இருந்தாலும் சரி. ஆகவே தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதானால் மக்கள் பிரதிநிதிகள் மிகக்கடுமையாக உழைக்கவேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நாம் அந்த உழைப்பபை செலுத்தியதனூடாக மக்களின் வாழ்நிலைகள் முன்னேற்றம் கண்டுள்ளன. இந்நிலையில் யுத்தபாதிப்பால் துவண்டுபோயுள்ள எமது மக்களை அப்பாதிப்பிலிருந்து மீட்டெடுத்து யுத்த்திற்கு முற்பட்ட காலத்திற்கு ஒப்பான நிலைக்கு கொண்டுவருவதே இன்றுள்ள முதல்ப்பணி என நாம் கருதுகின்றோம் ஆகவே அந்த தூர நோக்குடனேயே நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
ஆனால் மக்களின் உரிமைக்காக மட்டும் செயற்படுவதாகக்கூறிக்கொண்டிருப்பவர்கள் இதுவரை ஒருபடியேனும் முன்னேறவில்லை அதற்காக அவர்கள் உழைக்கவும் இல்லை மாறாக வெளிநாட்டவரிடம் மகஜர் கையளிப்பதிலேயே காலங்களை கழித்துள்ளனர்.
ஆகவே மூலைச்சலவை செய்யப்படுவதனூடாக அதற்கு கட்டுப்பட்டு வாக்களிக்கும் நிலைமை எமது மக்கள் மத்தியிலிருந்து மாற்றம் பெறவேண்டும் சுயமான சிந்தனைகளின் அடிப்படையில் வாக்களிக்கும் நிலைமை உருவாக வேண்டும். இன்று மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து விளைவுகளுக்கும் ஏற்படுத்தப்படுகின்ற அரசியல் சூழலே காரணமாக அமைகின்றது. எனவே சரியான அரசியலை மக்கள் அறிந்து வாக்களிக்கவேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago