2025 ஜூலை 07, திங்கட்கிழமை

புங்குடுதீவு படுகொலையை கண்டித்து நல்லூரில் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2015 மே 17 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவியொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து நல்லூர் ஆலய முன்றலில் யாழ்ப்பாண இளைஞர்களால் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.  

படுகொலையைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு சார்பாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகக்கூடாது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர். அத்துடன், இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசாங்கம் இதற்கு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

கடந்த புதன்கிழமை (13) பாடசாலைக்குச் சென்ற மாணவி கடத்தப்பட்டு, பற்றைக்குள் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையுடன் தொடர்புடைய சகோதரர்களான 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .