2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மூன்று தினங்களுக்கு சீரற்ற காலநிலை தொடரும்

George   / 2015 மே 17 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இடை அயன ஒடுங்கல் வலயம், வடக்கு பகுதிக்கு மேல் காணப்படுவதால் தற்போது மழை வீழ்ச்சி காணப்படுகின்றது. இது தற்போது நாட்டை கடந்து செல்வதால் தொடர்ந்து மூன்று தினங்கள் இவ்வாறு சீரற்ற காலநிலை தொடரும் என்று திருநெல்வேலி பிராந்திய வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி டி.பிரதீபன் தெரிவித்தார்.

இடை அயன ஒடுங்கல் வலயமானது தற்போது நாட்டை விட்டு கடந்து செல்ல ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இது தற்போது வடக்கு பகுதிக்கு மேல் காணப்படுவதால் இக்காலநிலை நிலவுகின்றது. அது இன்னும் மூன்று தினங்களில் சுமுகமான காலநிலைக்கு திரும்பும்.

கடந்த 11ஆம் திகதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை(17) காலை 11.30 மணி வரைக்கும் 172.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதனைவிட கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (17) வரையில் 293.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இது கடந்த வருட மே மாதம் வரையான  மொத்த மழை வீழச்சியைவிட இரண்டு மடங்கிலும் அதிகமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .