2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பிதிர்க்கடன் செய்யும் நிகழ்வு

Thipaan   / 2015 மே 17 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு சமய வழிபாடுகள் மூலம் ஆத்மசாந்தி வேண்டி பிதிர்க்கடன் செய்யும் நிகழ்வு, முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் ஏற்பாட்டில், ஈழத்தின் புனித தீர்த்தக்கரையான கீரிமலை புனித தீர்த்தக்கரையோரத்தில் இன்று (17) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஜயகாந் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இறந்தவர்களின் பிள்ளைகள், தாய், தந்தையர், சகோதர சகோதரிகள் ஒன்றிணைந்து இறந்தவர்களின் ஆத்ம சாந்தியடைய பிதிர்க்கடன்களைச் செய்தனர்.

இந்நிகழ்வுக்கு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த இறந்தவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டதுடன் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டு ஆத்மசாந்திக்காக பிரார்த்தனை செய்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .