2025 ஜூலை 07, திங்கட்கிழமை

யாழில் வன்முறைகள் அதிகரிப்பு

Sudharshini   / 2015 மே 18 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எல்.லாபீர்

யாழ்.மாவட்டத்தில் இளைஞர்களிடையே போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ளதோடு வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்.கிளையின் தலைவர் கு.பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்.கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (17) நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தலைமை உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

யாழ்.மாவட்டத்தில் போதைவஸ்துப் பாவனையை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. மாணவர்களும் இளைஞர்களும் திசைமாறி வாழ முற்படுகின்றனர். எமது சங்கம் மக்களுக்கு தொடர்ச்சியாக பல்வேறு சமூக சேவைகளையும் மேற்கொண்டு வருகின்றது. எமது சங்கத்தின் சகல பிரிவினரும் போதைவஸ்த்தை ஒழிப்பதற்காக தியாகத்தை மேற்கொள்ள வேண்டியது எமது கடமை.

ஏ – 9 வீதியில் அமைந்திருந்த எமது சங்க கட்டடம் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்டமையால் அதை அழித்து, அந்த இடத்தில் புதிய எரிபொருள் நிரப்பும் நிலையத்தை இந்திய அரசின் உதவியுடன் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், சில மாநகர சபை உறுப்பினர்களின் சூழ்ச்சியால் எரிபொருள் நிலையத்தை அமைக்க முன்னாள் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தடைவிதித்தார்.

அது தொடர்பில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வெற்றியடைந்தோம். எரிபொருள் நிரப்பு நிலையம் நிர்மாணிக்கப்பட்டு அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு செஞ்சிலுவைச் சங்கத்தின் சகல பிரிவுகளுக்கும் உதவிகள் வழங்கப்படும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .