Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 மே 18 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அரசரட்ணம்
வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபைக்கு பொதுமக்கள், வர்த்தகர்கள் அன்பளிப்புப் பொருட்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என பிரதேச சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ரி.குமணன் திங்கட்கிழமை (18) தெரிவித்தார்.
வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபைக்கு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களால் வழங்கப்பட்ட அன்பளிப்புப் பொருட்களை மக்களிடம் மீளக்கொடுக்குமாறு பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் அது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று அவர் இதன்போது தெரிவித்தார்.
பிரதேச சபையின் சட்டதிட்டங்களுக்கு முரணாக வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கும் சலுகைகளைப் பெறுவதற்கும் முற்படும் சிலர், அன்பளிப்புப் பொருட்கள் என்ற பெயரில் இலஞ்சம் வழங்க எத்தனிப்பார்கள். இதனால் பிரதேச சபையின் நிர்வாகத்துக்கு களங்கம் ஏற்படுவதுடன், நேர்மையாகக் கடமையை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகும் என்றும் அவர் குறிப்பட்டிருந்தார்.
தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப்பெட்டி, சுழல்கதிரை உட்பட பல பொருட்கள் பிரதேச சபைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பிரதேச சபை மீண்டும் அவர்களிடம் கொடுப்பதன் மூலம் நேர்மையான நிர்வாகத்தை நடத்த முடியும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago