2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வீட்டுத்திட்டத்தை கொன்சலட் ஜெனரல் பார்வையிட்டார்

Sudharshini   / 2015 மே 18 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

யாழ்.இந்தியத் தூதரகத்தின் கொன்சலட் ஜெனரல் ஏ.நடராஜா, கிளிநொச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை (17) விஜயம் செய்து வட்டக்கச்சி பிரதேசத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளைப் பார்வையிட்டார்.

தொடர்ந்து வட்டக்கச்சி மருத்துவமனைக்குச் சென்று தேவைகள், பிரச்சினைகள் தொடர்பில் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்துகொண்டார்.

வட்டக்கச்சி பகுதி மக்களை சந்தித்த அவர், மக்களின் தேவைகள் மற்றும் குறைபாடுகளை அறிந்து அவற்றை தீர்ப்பதற்கு தம்மாலான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .