Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 மே 18 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.குகன்
காரைநகர் மணிவாசகர் சபை மற்றும் தமிழ் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் நிறுவுநர் சிவத்தமிழ் வித்தகர் மூதறிஞர் பண்டிதமணி கலாநிதி க.வைத்தீசுவரக் குருக்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் அஞ்சலிக் கூட்டமும் நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றன.
காரைநகர் மணிவாசகர் சபையின் தலைவர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோண்டாவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் ந.கணேசமூர்த்தியின் வரவேற்புரையைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன.
நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், யாழ். மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன், வாழ்நாள் பேராசிரியர்களான ப.கோபாலகிருஷ்ண ஐயர், அ.சண்முகதாஸ் ஓய்வுநிலை அதிபர் வித்துவான் ஆ.சபாரத்தினம், கலாபூஷணம் கோப்பாய் சிவம், கவிஞர் வே.குமாரசுவாமி, கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளர் ச.லலீசன், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் ஆகியோர் நினைவுரை ஆற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago