Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 மே 19 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த்
புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (19) கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
மாணவியின் கொலைக்கு நீதி வேண்டுமென கடைகளின் உரிமையாளர்கள், ஊழியர்கள் இணைந்து கஸ்தூரியார் வீதிச் சந்தியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 13ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற மாணவி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, மூவர் விளக்கமறியலிலும் ஐவர் பொலிஸ் காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாணவியின் கொடூரகொலைக்கு நீதி வேண்டுமெனவும் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரியும் கடைக்காரர்கள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
57 minute ago