2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

துஷ்பிரயோகங்களுக்கு எதிராக புதிய சட்டம் வேண்டும்

Sudharshini   / 2015 மே 19 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோம் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்றை அரசாங்கம் அமுல்;படுத்த வேண்டும் எனக்கோரி யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முன்பாக செவ்வாய்க்கிழமை (19) கண்டனப் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடத்தப்பட்டது.

புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து, நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது 'மக்கள் சக்தி கண்டனப் பேரணி' என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்டது.

புதிய சட்டத்தை உருவாக்குவதற்கு வடமாகாண சபை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

ஆர்ப்பாட்ட யாழ்.மாவட்டச் செயலகத்துக்குச் சென்று அங்கு யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .