2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

Sudharshini   / 2015 மே 19 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூவி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உறுதியளித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் ஒழுங்குசெய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தினம் முள்ளிவாய்க்காலில் திங்கட்கிழமை (18) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே விஜயகலா இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களினை நினைவுகூருவதற்கு சரியான இடம் ஒன்று தேவை. அதற்காக முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபியொன்று அமைக்கப்படவேண்டும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டிக்க முடியவில்லை. பெரும் அச்சுறுத்தல்களும் கட்டுப்பாடுகளும் இருந்தன. வீடுகளிலும் மறைவிடங்களிலும் நினைவு தினத்தை அனுஷ்டித்தோம். இன்று அவ்வாறு இல்லை. சுதந்திரமாக நினைவுதினத்தை அனுஷ்டிக்க முடிகின்றது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .