Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 மே 19 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த்
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முள்ளிவாய்க்காலில் ஏற்பாடு செய்திருந்தும், வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் முள்ளிவாய்க்காலில் தனியாக நினைவுச்சுடர் ஏற்றி திங்கட்கிழமை (18) அனுஷ்டித்தார்.
இது தொடர்பில் அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது,
கீரிமலையில் பிதிர்க்கடன் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு முள்ளிவாய்க்கால் செல்கையில் எனக்கு நேரம் சென்றுவிட்டது. முள்ளிவாய்க்காலில் காலை 10 மணிக்கு நினைவுச்சுடர் ஏற்றி நினைவேந்தல் நடைபெற்றது. நான் அங்கு செல்ல 10.20 க்கும் மேலாகிவிட்டது. இதனால் அவர்களுடன் இணைந்து நினைவுச்சுடர் ஏற்றி வழிபடமுடியவில்லை.
கூட்டமைப்பால் ஒழுங்குசெய்யப்பட்ட புதுக்குடியிருப்பு சிவன் ஆலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வில் கலந்துகொண்டேன். அதன் பின்னர் தனியாக சென்று முள்ளிவாய்க்காலில் ஜோர்தான் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்துக்கு அருகில் சென்று நினைவுச்சுடர் ஏற்றி நினைவுகூர்ந்தேன். எனக்கு இன்று முக்கியமான நாள். அந்தக் கப்பல் தரித்து நின்றதுக்கு அருகில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து சடலமாக இருப்பதை கண்ணால் கண்டவள் நான்.
இன்றைய தினத்தில் நான் விரதம் இருந்து உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்தேன். வாகன வசதி இல்லாமையால் இன்று சரியான நேரத்துக்கு அங்கு செல்ல முடியவில்லை. வடமாகாண சபைத் தேர்தலில் இரண்டாவது அதிக வாக்குகள் பெற்ற எனக்கு இன்னமும் வாகன வசதி செய்யப்படவில்லை என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
54 minute ago