2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இராணுவ வாகனம் மோதி வயோதிபர் உயிரிழப்பு

Thipaan   / 2015 மே 19 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

மல்லாகம் சந்தியில் கடந்த 12ஆம் திகதி இராணுவ வாகனம் மோதி படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (19) உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜ.என்.எஸ்.கஸ்தூரியாராச்சி தெரிவித்தார்.

மல்லாகம் சந்தியில் துவிச்சக்கவண்டியில் சென்றுகொண்டிருந்த வயோதிபரை பின்னால் வந்த இராணுவ வாகனம் மோதிவிட்டுத் தப்பிச் சென்றது.

இதில் படுகாயமடைந்த தம்பிப்பிள்ளை பாலசுந்தரம்  (வயது 68) என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வயோதிபரை மோதிய வாகனத்தைக் உயர்பாதுகாப்பு வலயத்தில் கைப்பற்றிய பொலிஸார், சாரதியையும் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சாரதி பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், வயோதிபர் இன்று மரணமடைந்துள்ளார்.

மரண விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொறுப்பதிகாரி கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .