2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

யாழ். நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்தவர்களில் வாகனங்கள் மீட்பு

George   / 2015 மே 20 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை(20) குழப்பம் விளைவித்தவர்களின் மோட்டார்கள் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் சந்தேகநபர்கள் யாழ். நீதிமன்றத்துக்கு இன்று புதன்கிழமை (20) கொண்டுவரப்படுவதை அடுத்து, அங்கு பெருமளவான பொதுமக்கள் கூடினர். 

கூடியவர்களில் சிலர் நீதிமன்ற கட்டடத்து கண்ணாடிகளுக்கு கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்ததுடன், நீதிமன்றத்துக்குள் நின்றிருந்த வாகனங்களின் கண்ணாடிகளையும் உடைத்தனர். இதில் பொலிஸார் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் மேல் நோக்கிய துப்பாக்கிச் சூடு நடத்தி குழப்பம் விளைவித்தவர்களைக் கலைத்தனர். 

இதன்போது, அவர்களது வாகனங்களை நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் விட்டுவிட்டுத் தப்பிச்சென்றனர். அதனை மீட்ட பொலிஸார் அவற்றை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .