2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

யாழின் பதற்றம் தணிந்தது; கவச வாகனங்களில் படையினர்

George   / 2015 மே 20 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் இன்று புதன்கிழமை (20) ஏற்பட்ட பதற்றமான நிலை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், புதன்கிழமை (20) யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதாக தகவல் கிடைத்து அங்கு கூடியவர்கள், நீதிமன்ற கட்டடத்துக்கு கற்கள் வீசி கண்ணாடிகளை உடைத்ததுடன், 3 வாகனங்களின் கண்ணாடிகளையும் உடைத்தனர். 

கல்வீச்சில் பொலிஸ் அதிகாரி ஒருவரும் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, கண்ணீர் புகைக்குண்டு மற்றும் மேல் நோக்கிய துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு குழப்பம் விளைவித்தவர்களை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 

தொடர்;ந்து, இராணுவத்தினரின் உதவி நாடப்பட்டு நீதிமன்றத்தை சுற்றிலும் பாதுகாப்பு போடப்பட்டது. 

நீதிமன்றத்துக்குள் நுழையும் வீதிகளில் பொலிஸார் பாதுகாப்பு நிறுத்தி வைக்கப்பட்டு, தேவையற்ற விதத்தில் எவரும் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.

நீண்ட நாட்களின் பின்னர் யாழ். நகரத்துக்குள் கவச வாகனத்தில் இராணுவத்தினர் வந்து பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

குழப்பம் விளைவித்தவர்களின் மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கரவண்டிகள் மற்றும் அவர்களது உடமைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .