2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

யாழில் பொலிஸ் கண்காணிப்பகம் சேதம்

Princiya Dixci   / 2015 மே 21 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்.மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இருந்த பொலிஸ் கண்காணிப்பகம், இனந்தெரியாத சிலரால் புதன்கிழமை (20) அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது.

யாழ்.நீதிமன்ற வளாகத்தில் கலகம் விளைவித்தவர்களை பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைத்த போது, அங்கிருந்து ஓடியவர்கள் பொலிஸ் கண்காணிப்பகத்தை அடித்து உடைத்துள்ளனர்.

கண்காணிப்பகம் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. யாழ்.நகரத்தில் நடைபெறும் குற்றச்செயல்களை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில் இந்த பொலிஸ் கண்காணிப்பகம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .