Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 மே 21 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
புங்குடுதீவு மாணவியின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என 9ஆவது நபராக வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்ட சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவரை, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித ஏ ஜெயசிங்க, வியாழக்கிழமை (21) தெரிவித்தார்.
யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என செய்த முறைப்பாட்டின் பிரகாரம் கொழும்பு வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்ட இவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் கொண்டுவரப்பட்டார்.
புங்குடுதீவில் பொதுமக்களால் முன்னர் பிடிக்கப்பட்டு இந்த நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். குறித்த நபர், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என எவ்வித ஆதாரங்களும் இல்லையென புலனாய்வாளர்களால் கூறப்பட்டதையடுத்து, அவரை விடுவித்து சிகிச்சை பெறுவதற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தோம்.
இந்நபர் யாழ்ப்பாணத்தில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என வெள்ளவத்தையில் இருந்த சிலர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்படி நபர் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, அவர் தொடர்பான தகவல்கள் எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின்னரே அவர் நாங்கள் கைது செய்துவிடுவித்த நபர் என்பது தெரியவந்தது.
அவரிடம் தற்போது வாக்கு மூலம் பெறப்பட்டு வருகின்றது. வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago