Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 மே 21 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதன்கிழமை (20) ஹர்த்தாலின் போது குழப்பங்களை விளைவித்த 129 பேரையும் விளக்கமறியிலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், வியாழக்கிழமை (21) உத்தரவிட்டார்.
நீதிமன்ற கட்டடத்துக்கு கல்வீசி கண்ணாடிகளை உடைத்தவர்கள், நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தியிருந்த வாகனங்களுக்கு சேதம் விளைவித்தவர்கள், பொலிஸாரை தாக்கி காயப்படுத்தியவர்கள், பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள், சமாதானத்துக்கு பங்கம் விளைவித்தவர்கள், கலகத்தில் ஈடுபட்டவர்கள் என 129 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். முதலாவதாக ஆஜர்படுத்தப்பட்ட 43 பேரையும் எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி வரையும் இரண்டாவதாக ஆஜர்படுத்தப்பட்ட 39 பேரை ஜூன் மாதம் 4ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மூன்றாவதாக ஆஜர்படுத்தப்பட்ட 33 பேரையும் 4 ஆவதாக ஆஜர்படுத்தப்பட்ட 14 பேரையும் ஜூன் மாதம் 1ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, குறித்த 129 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, நீதவான் அவர்களை கடுமையாக எச்சரிக்கை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
18 minute ago
33 minute ago