Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Gavitha / 2015 மே 24 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
திருக்கணித பஞ்சாங்கக் கணிதர் கலாபூஷணம் சி.சிதம்பரநாதக் குருக்கள் தனது 80ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை (24) அதிகாலை 5 மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலையில் காலமானார்.
இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவிதாங்கூர் எனும் இடத்தில், சிதம்பரஐயருக்கும் ஜானகி அம்மாளுக்கும் 18.12.1935 அன்று இவர் பிறந்தார். சிறுவயதிலேயே திருக்கணித பஞ்சாங்கக் கணிதர் சி.சுப்பிரமணியக் குருக்களால் இவர் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டார்.
விவாகம், புதுமனைப் பிரவேசம் முதலிய மங்கல காரியங்களையும் அந்தியோட்டி முதலிய கருமங்களையும் குருக்கள் மூலம் நிறைவேற்றுவதில் தென்மராட்சி மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். அவரது காலத்தில் பதினான்கு மஹா கும்பாபிஷேகங்களை நிறைவேற்றிய பேற்றினைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago