2025 ஜூலை 05, சனிக்கிழமை

முறைபாடுகள் கிடைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்

Kogilavani   / 2015 மே 26 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்கள் காணாமல் போதல் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கபெற்றால் பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

'அப்பெண்கள் காதலர்களுடன் ஓடியிருக்கலாம். நாளை வருவார்கள்' எனக் கூறி முறைப்பாட்டாளர்களைத் திருப்பி அனுப்புவது பொலிஸாரின் கடமையல்ல எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளதாவது,

'வடக்கில் பணியாற்றிவரும் பொலிஸார் எமது மக்களை அடிமைகளை போல் நடத்தகூடாது. மக்களின் மனங்களை புரிந்துகொண்டு மனிதாபிமான முறையில் பொலிஸார் தங்களது கடமைகளை ஆற்ற வேண்டியது அவசியம்' என தெரிவித்தார்.

'யாழ். உடுத்துறையில் இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறானது  பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளும் அளவுக்கு சென்றுள்ளது. சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படக்கூடிய அல்லது உரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைய தீர்த்து வைக்கப்படக்கூடிய பிரச்சினைகள் ஆயுதங்களால் தீர்க்கக்கூடிய அளவுக்கு செல்வதானது எமது சமுதாயத்தின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல' என்றார்.

இவ்வாறான சமூகப் பிரச்சினைகளின்போது, சில விட்டுக் கொடுப்புகளுடன் அவற்றைத் தீர்த்துக் கொள்ள எமது மக்களும் முன்வருதல் ஆரோக்கியமானதாகும். எமது மக்களை அடிமைகளை போல், ஆதிக்க மனப்பான்மையுடன் அணுகுவதை பொலிஸார் தவிர்த்து, மனிதாபிமான முறையில் நடந்துகொள்ள வேண்டும்.எனவே, பொலிஸார் தங்களது கடமைகளை உணர்ந்து, இதனை சரிவர செய்வதுடன், மனிதாபிமான முறையில் நடந்துகொள்ள வேண்டும்'  என  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0

  • pradeep Tuesday, 26 May 2015 09:57 PM

    அன்பான அமைச்சரே ஆட்சியில் இருக்கும்போது பேசவேண்டியதை, தற்போது பேசுவதற்கான காரணம் என்ன? இனிவரும் காலங்களில் சட்டம் சட்டமாக இருக்கும், பொலிஸ் பொலிஸாக இருக்கும். அதை புதிய அரசால் நிருபித்துக்கொண்டிருகின்றனர். தயவு செய்து எந்த ஒரு அரசியல்வாதியும் இனவாதத்தை காட்டி அரசியல் செய்ய வேண்டாம். நாட்டிற்க்கு, மக்களுக்கு என்ன தேவை என்று மட்டும் சிந்தியுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .