2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கள் விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்

Kogilavani   / 2015 மே 28 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நகரப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி கள் விற்பனை செய்த மூவருக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் புதன்கிழமை (27) தீர்ப்பளித்தார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்துக்கான மதுவரித் திணைக்களத்தினர் நகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (26) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மூவரும் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் புதன்கிழமை(27) ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன்போதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

இதேவேளை, கிளிநொச்சி நகர்ப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மதுபான விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் புதன்கிழமை (27) தீர்ப்பளித்தார்.

180 மில்லிலீற்றர் மதுபானத்தை விற்பனை செய்யும்போது கைதுசெய்யப்பட்ட நபருக்கு 50 ஆயிரம் ரூபாயும், 1850 மில்லிலீற்றர் மதுபானத்தை விற்பனை செய்யும் போது கைதான நபருக்கு 1 இலட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

மேற்படி இருவரும் கிளிநொச்சி பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (26) கைதுசெய்யப்பட்ட புதன்கிழமை (27) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதேவேளை, கிளிநொச்சி பகுதியில் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றியவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .