2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

யாழில் உலக புகையிலை எதிர்ப்பு தினம்

George   / 2015 மே 28 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம் விஞ்ஞான சங்கத்தின் ஏற்பாட்டில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வியாழக்கிழமை (28) நடைபெற்றது.

புகைத்தலால் ஏற்படும் புற்றுநோய் தாக்கம் தொடர்பிலும் புகையிலை தொடர்பிலான விளக்கங்களும் இதன்போது அளிக்கப்பட்டன. மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் செம்முகம் ஆற்றுகைக்குழுவின் 'உயிர் தின்னும் புகை' என்னும் குறியீட்டு நாடகமும் இடம்பெற்றது.

யாழ். மாவட்ட சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளிலுள்ள வர்த்தக நிலையங்களில்  புகைத்தல் பொருட்கள் வி;ற்பனை செய்யாத வர்த்தகர்களின் செயலைப் பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறையின் முன்னாள் தலைவர் வைத்தியகலாநிதி என்.சிவராசா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி என்.சிவன்சுதன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத் துறைத் தலைவர் வைத்தியகலாநிதி எஸ்.சுரேந்திரன், மருத்துவ பீடாதிபதி வைத்தியகலாநிதி பேராசிரியர் கே.சிவபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .